![]() |
| Corona Test |
Thursday, July 2, 2020
கொரோனா தொற்று - 02.07.2020
தமிழகத்தில் ஒரே நாளில் 4,343 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இன்று மட்டும் சென்னை-இல் 2027 பேர் கொரானா தொற்று
இன்று உயிரிழந்துள்ளனர் 57 பேர்.
இன்று டிஸ்சார்ஜ் 3,095 பேர்
இதுவரை 56,021 பேர் குணமடைந்துள்ளனர்
தமிழகத்தில் கடந்த மாதத்தில் இருந்து தினந்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பாக கடந்த மாதம் 25-ந்தேதியில் இருந்து நாள்தோறும் 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் இருந்தது.இந்நிலையில் இன்று 4 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இன்று ஒரே நாளில் 4,343 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த
எண்ணிக்கை 98,392 ஆக உயர்ந்துள்ளது
Wednesday, July 1, 2020
கரோனில் மருந்துகளான தொகுப்புக்கு எவ்வித தடையுமில்லை- பதஞ்சலி ராம்தேவ் தெரிவித்துள்ளார்
![]() |
| Patanjali Covid-19 Medcine |
செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது - கரோனாவை எதிர்கொள்ள பதஞ்சலி சரியான பணியை செய்திருப்பதாக ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பதஞ்சலி சரியான பாதையை நோக்கி பயணிக்கத் தொடங்கியிருப்பதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைப்பில் இருக்கும் மாநிலப் பிரிவிடம் இதற்கு உரிமம் பெற்றுள்ளோம். கரோனா சிகிச்சை என்ற வார்த்தையை ஆயுஷ் அமைச்சகம் உபயோகப்படுத்தவில்லை.ஆயுஷ் அமைச்சகத்துடன் எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. தற்போது கரோனில், சுவாசரி உள்ளிட்டவற்றுக்குத் தடையில்லை. சுவாசரி கரோனில் தொகுப்பு மருந்துகள் இன்று முதல் நாடு முழுவதும் எவ்வித சட்டரீதியிலான இடையூறுகளின்றி கிடைக்கும். ஆயுஷ் அமைச்சகத்துக்கும், நரேந்திர மோடி அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.”முன்னதாக, ‘கரோனில்’ மருந்து கரோனாவைக் கட்டுப்படுத்தும் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்று பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
என்எல்சி கொதிகலன் வெடித்து விபத்து
![]() |
| NLC Blast |
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், நெய்வேலியில் உள்ள அனல் மின்நிலையம்-2ல், அலகு-5ல் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று இன்று (1.7.2020) காலை திடீரென வெடித்த விபத்தில், ஆறு நபர்கள் உயிரிழந்தனர்.
கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன், தீ விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
அவரது உத்தரவின் பேரில், எம்.சி சம்பத், மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பதினேழு நபர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்; பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்; லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
39 ஐபிஎஸ் அதிகாரிகள்! - ஒரே இரவில் இடமாற்றம்
![]() |
| Tamilagam Police Cap |
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
1. சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக இருந்த சுனில்குமார், மனித உரிமை கமிஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2. மதுரை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய டேவிட்சன் ஆசீர்வாதம், மாநில தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.
3. சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுப் புதிய கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்
4. சென்னை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், ஏடிஜிபி operation - ஆக இடமாற்றப்பட்டுள்ளார்
5. பெண்கள் மற்றும் மற்று குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியாற்றிய எம்.ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
6. ஏடிஜிபி operation - ஆக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. சென்னைத் தலைமையக ஐஜியாகப் பணியாற்றிய ஜெயராம், திருச்சி மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
8. திருச்சி மண்டல ஐஜியாகப் பணியாற்றிய அமல்ராஜ், சென்னைத் தலைமையகக் கூடுதல் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
9. சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா, டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
10 .சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றிய பிரேம்ஆனந்த் சின்ஹா மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
11. சென்னைப் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராகப் பணியாற்றிய அருண், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
12. திருப்பூர் போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய சஞ்சய்குமார், தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
13. பதவி உயர்வு
சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராகப் பணியாற்றிய கபில்குமார் சரத்கர், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
14. உள்நாட்டுப் பாதுகாப்பு டிஐஜியாக கண்ணன், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னைப் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
15. விழுப்புரம் சரக டிஐஜியான சந்தோஷ்குமார், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
16. காஞ்சிபுரம் டிஜஜியான தேன்மொழி, ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
17. கோவை சரக டிஐஜியான கார்த்திகேயன், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
18. திண்டுக்கல் சரக டிஐஜியான ஜோஷி நிர்மல்குமார், பதவி உயர்வு பெற்று எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
19. கடலோரப் பாதுகாப்பு பிரிவு டிஐஜியான பவானீஸ்வரி, ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னைப் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
20. திருச்சி சரக டிஐஜியான பாலகிருஷ்ணன், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
21. சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார், கடலோரப் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
22. சிபிசிஐடி:
சென்னைத் தலைமையக இணை கமிஷனரான ஏ.ஜி பாபு, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
23. சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனரான மகேஷ்வரி, தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
24. சென்னை தெற்குப் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான எழிலரசன், விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
25. ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி, சென்னை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
26 (2). மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, திருச்சி சரகத்துக்கும்
27. ராமநாதபுரம் டிஐஜி, ரூபேஷ்குமார் மீனா தஞ்சைக்கும்
28. சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜி நரேந்திரன் நாயர் கோவை சரகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
29. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சாமுண்டீஸ்வரி, பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
30. சென்னை வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி லட்சுமி, பதவி உயர்வு பெற்று சென்னை தெற்குப் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
31. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி ராஜேஸ்வரி பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
32. சீருடைப் பணியாளர் தேர்வாணை எஸ்.பி பாண்டியன் பதவி உயர்வு பெற்று ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
33. சென்னை பூக்கடை துணை கமிஷனராகப் பணியாற்றிய ராஜேந்திரன் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று மதுரை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
34. சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துச்சாமி டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
35. சென்னை தெற்குப் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனரான மயில்வாகனன், டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
36 . சென்னைப் பாதுகாப்புப் பிரிவு துணை கமிஷனரான ராதாகிருஷ்ணன், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
37. எஸ்.பிஅபிஷேக் தீட்சீத், டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
38 & 39. சென்னைப் பொருளதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக கணேஷ் மூர்த்தியும், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றும் தினகரன்,
தெற்கு மண்டலக் கூடுதல் கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Subscribe to:
Comments (Atom)



