Wednesday, July 1, 2020

39 ஐபிஎஸ் அதிகாரிகள்! - ஒரே இரவில் இடமாற்றம்



Tamilagam Police Cap
தமிழகத்தில் 39 ஐ.பி.எஸ் அதிகாரிகள் நேற்றிரவு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

1. சீருடைப் பணியாளர் தேர்வாணைய டிஜிபியாக இருந்த சுனில்குமார், மனித உரிமை கமிஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

2. மதுரை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய டேவிட்சன் ஆசீர்வாதம், மாநில தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபியாக மாற்றப்பட்டுள்ளார்.

3. சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டுப் புதிய கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார் 

4. சென்னை போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய ஏ.கே.விஸ்வநாதன், ஏடிஜிபி operation - ஆக இடமாற்றப்பட்டுள்ளார்

 5. பெண்கள் மற்றும் மற்று குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு ஏடிஜிபியாகப் பணியாற்றிய எம்.ரவி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

6. ஏடிஜிபி operation - ஆக பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. சென்னைத் தலைமையக ஐஜியாகப் பணியாற்றிய ஜெயராம், திருச்சி மண்டல ஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

8. திருச்சி மண்டல ஐஜியாகப் பணியாற்றிய அமல்ராஜ், சென்னைத் தலைமையகக் கூடுதல் கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

9. சிபிசிஐடி எஸ்.பி மல்லிகா, டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

10 .சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றிய பிரேம்ஆனந்த் சின்ஹா மதுரை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. சென்னைப் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராகப் பணியாற்றிய அருண், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

12. திருப்பூர் போலீஸ் கமிஷனராகப் பணியாற்றிய சஞ்சய்குமார், தொழில்நுட்பப் பிரிவு ஐஜியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

13. பதவி உயர்வு சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராகப் பணியாற்றிய கபில்குமார் சரத்கர், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

14. உள்நாட்டுப் பாதுகாப்பு டிஐஜியாக கண்ணன், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னைப் போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

15. விழுப்புரம் சரக டிஐஜியான சந்தோஷ்குமார், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை நிர்வாகப் பிரிவுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

16. காஞ்சிபுரம் டிஜஜியான தேன்மொழி, ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

17. கோவை சரக டிஐஜியான கார்த்திகேயன், ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று திருப்பூர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

18. திண்டுக்கல் சரக டிஐஜியான ஜோஷி நிர்மல்குமார், பதவி உயர்வு பெற்று எஸ்டாபிளிஸ்மென்ட் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

19. கடலோரப் பாதுகாப்பு பிரிவு டிஐஜியான பவானீஸ்வரி, ஐஜியாகப் பதவி உயர்வு பெற்று சென்னைப் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

20. திருச்சி சரக டிஐஜியான பாலகிருஷ்ணன், சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார், கடலோரப் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

22. சிபிசிஐடி: சென்னைத் தலைமையக இணை கமிஷனரான ஏ.ஜி பாபு, சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

23. சென்னை தெற்கு மண்டல இணை கமிஷனரான மகேஷ்வரி, தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

24. சென்னை தெற்குப் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனரான எழிலரசன், விழுப்புரம் சரக டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

25. ஆயுதப்படை டிஐஜி செந்தில்குமாரி, சென்னை தலைமையகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். 

26 (2). மதுரை சரக டிஐஜி ஆனி விஜயா, திருச்சி சரகத்துக்கும்

27. ராமநாதபுரம் டிஐஜி, ரூபேஷ்குமார் மீனா தஞ்சைக்கும்

28. சென்னை நிர்வாகப் பிரிவு டிஐஜி நரேந்திரன் நாயர் கோவை சரகத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

29. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி சாமுண்டீஸ்வரி, பதவி உயர்வு பெற்று காஞ்சிபுரம் டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. சென்னை வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி லட்சுமி, பதவி உயர்வு பெற்று சென்னை தெற்குப் போக்குவரத்து போலீஸ் இணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

31. சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி ராஜேஸ்வரி பதவி உயர்வு பெற்று சென்னை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

32. சீருடைப் பணியாளர் தேர்வாணை எஸ்.பி பாண்டியன் பதவி உயர்வு பெற்று ரயில்வே டிஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.

33. சென்னை பூக்கடை துணை கமிஷனராகப் பணியாற்றிய ராஜேந்திரன் டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று மதுரை சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

34. சென்னை அண்ணாநகர் துணை கமிஷனர் முத்துச்சாமி டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று திண்டுக்கல் சரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

35. சென்னை தெற்குப் போக்குவரத்து இணை போலீஸ் கமிஷனரான மயில்வாகனன், டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று ராமநாதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

36    . சென்னைப் பாதுகாப்புப் பிரிவு துணை கமிஷனரான ராதாகிருஷ்ணன், விழுப்புரம் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

37. எஸ்.பிஅபிஷேக் தீட்சீத், டிஐஜியாகப் பதவி உயர்வு பெற்று மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

38 & 39. சென்னைப் பொருளதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக கணேஷ் மூர்த்தியும், சென்னை வடக்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றும் தினகரன்,
தெற்கு மண்டலக் கூடுதல் கமிஷனராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


on July 01, 2020 by  |