Thursday, July 2, 2020

கரோனா வைரஸ் நோய்த் தொற்று - வெளிமாநிலங்களில் 02.07.2020

Corona Test
கேரளம்: கேரளத்தில் புதிதாக 160 பேருக்கு - இதில் 106 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 40 பேர் வெளிமாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள். 14 பேர் கேரளத்திலேயே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2,088 ஆகியுள்ளது. இன்று 202 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,638 பேர் குணமடைந்துள்ளனர். அந்த மாநிலத்தில் மொத்தம் 123 ஹாட்ஸ்பாட்-கள் உள்ளன. கர்நாடகம்: கர்நாடகத்தில் புதிதாக 1,502 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 19 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 18,016 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 272 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் இன்று மேலும் 271 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,334 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 9,406 பேர் சிகிச்சையில் உள்ளனர்.கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களில் 161 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.இன்று அங்கு 16,210 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 6,53,627 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தில்லி: தில்லியில் இன்று புதிதாக 2,373 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.தில்லியில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி அங்கு புதிதாக 2,373 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 61 பேர் பலியாகியுள்ளனர்.இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 92,175 ஆகவும், பலி எண்ணிக்கை 2,864 ஆகவும் உயர்ந்துள்ளது.அதேசமயம் இன்று 3,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 63,007 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 26,304 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
on July 02, 2020 by  |